உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் போஸ்டரில் செருப்பு வீச்சு: மூதாட்டி மீது எம்.எல்.ஏ., புகார்

முதல்வர் போஸ்டரில் செருப்பு வீச்சு: மூதாட்டி மீது எம்.எல்.ஏ., புகார்

சென்னை:சென்னையில், மெட்ரோ துாணில் ஒட்டப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் போஸ்டர் மீது, மூதாட்டி ஒருவர் அவரது செருப்பு மற்றும் மண்ணை வாரி வீசும் வீடியோ காட்சி, சமூக வலைதளத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில், சம்பவம் நடந்தது, விருகம்பாக்கம் பரணி மஹால் அருகே என்பது தெரிய வந்தது.மேலும் அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு செல்லும்போது, மூதாட்டி இத்தகைய செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.சம்பவம் நடந்த இடம், விருகம்பாக்கம் மற்றும் கே.கே., நகர் காவல் நிலையங்களின் எல்லை பகுதி என்பதால், இரு காவல் நிலையங்களிலும், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பிரபாகர ராஜா புகார் அளித்துள்ளார். மூதாட்டி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

N.Purushothaman
டிச 28, 2024 18:16

ஆயாவை பிடிக்க துணை கமிஷனர் தலைமையில் அறுபது தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது .ஆங் ...சமூக நீதி அரசு ஹே ... திராவிட மாடல் அரசு ஹே ....


N.Purushothaman
டிச 28, 2024 18:04

திருட்டு திராவிட கட்சியின் அவலம் மாநிலத்தை நாசம் செய்கிறது ....


visu
டிச 28, 2024 16:33

இவனுங்க செய்வதை பார்த்தல் அடுத்த தேர்தல்ல நிக்க முடியாது போல


visu
டிச 28, 2024 16:31

ஹாஹா அரசின் மீதான விமர்சனம் செய்யக்கூடாது என இப்படி மிரட்டுகிறார்கள் போலும் அதெற்காக வயதான பாட்டியை தேடுவதெல்லாம் ஓவர் .சரி அப்படி கிடைத்தால் கைது செய்து அவருக்கு சிறப்பான இலவச மருத்துவ சிகிச்சை அளியுங்கள் அதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது அவரொன்றும் தப்பி ஓடப்போவதில்லை


CHELLAKRISHNAN S
டிச 28, 2024 13:23

as per recent information, that area has been prohibited to paste posters. then how the poster was there?


ஆரூர் ரங்
டிச 28, 2024 13:12

திமுக பொதுக்கூட்டத்தின் போது காவல் பணி செய்து கொண்டிருந்த பெண் காவலரின் மீது பாலியல் கொடுமை செய்த திமுக உறுப்பினர்களை விருகம்பாக்கம் காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து காப்பாற்றி வெளியே கொண்டு வந்த திமுக எம் எல் ஏ யார்?


Balamurugan
டிச 28, 2024 10:57

அந்த அளவுக்கு மக்கள் கொதித்து போயிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் மூதாட்டி மீது புகார் குடுக்குறானாம் MLA. அவங்க எல்லாம் ஒட்டு போட்டதனால தான் நீ MLA உன்னோட தலைவன் முதலமைச்சர். அந்த மூதாட்டி என்ன உங்க தலைவரையே செருப்பால அடிச்ச மாதிரி பேசுறே. எதுக்கு பொது இடத்தில போஸ்ட்டரை ஒட்டுறே. MLA மக்கள் குறைகளை கேட்டு நிவர்திப்படுத்தும் வேலைகளை செய்யாமல் புகார் குடுக்குறானாம். உங்க தலைவருக்கு முத்தம் குடுக்குற மாதிரி ஆட்சியை பண்ணுங்க.


Mathan
டிச 28, 2024 10:50

தனி படை அமைத்து 1000 போலீஸ் போட்டு கிழவியை கைது பண்ணுங்க போலீஸ்கார்.


ram
டிச 28, 2024 10:19

நேர்லே அடிக்கமுடியலே அதுதான் படத்தை பார்த்து அடிக்குது அந்த அம்மா.. உங்களோட ஆட்சி லட்சனம் இப்போ தெரியுதா... என்ன அந்த அம்மாவை புடிச்சு உள்ளே போடுவீங்க.. ஏன்னா ஒன்றும் இல்லாதவங்ககிட்டே தானே உங்களோட அதிகாரம் செயல்படும். மானம் கெட்ட திருட்டுக்கூட்டம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை