உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  உடனடி கழிவுநீர் இணைப்பு வழங்க ஆய்வின்போது எம்.எல்.ஏ., உத்தரவு

 உடனடி கழிவுநீர் இணைப்பு வழங்க ஆய்வின்போது எம்.எல்.ஏ., உத்தரவு

பெருங்குடி: பெருங்குடி மண்டலம், வார்டு 182க்கு உட்பட்ட பெருங்குடி அரசு மேல்நிலை பள்ளி மற்றும் கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., மேல்நிலை பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவ - மாணவியருக்கு, இலவச மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்வில், நேற்று காலை சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் பங்கே ற்றார். பின், கந்தன்சாவடி பகுதி மக்களின் தொடர் புகாரின்படி, கற்பக விநாயகர் கோவில் தெரு சாலையின் இருபுறமும் அமைந்துள்ள பிள்ளையார் கோவில், வ.உ.சி., உட்பட எட்டுக்கும் மேற்பட்ட தெருக்களில், கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குடிநீர், கழிவு நீர் இணைப்பில்லாத தெருக்களில், உடனடி இணைப்பு வழங்கவும், துார்ந்துள்ள வடிகால்வாய்களை துார்வாரவும் உத்தரவிட்டார். அது மட்டுமின்றி, மின்வெட்டை தவிர்க்கும் வகையில், புதிய மின்மாற்றி அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தவிர, மழைக்காலம் முடிந்து, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால்வாய் பணிகளை முடித்து, ஜனவரி மாதத்திற்கு பின், விடுபட்ட சாலைகள் அனைத்தையும் அமைத்து தருவதாக, பொது மக்களுக்கு உறுதி அளித்தார். இந்நிகழ்வில், பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி