உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடமாடும் பாஸ்போர்ட் சேவை துவக்கம்

நடமாடும் பாஸ்போர்ட் சேவை துவக்கம்

சென்னை, சென்னை, அண்ணாசாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், நடமாடும் பாஸ்போர்ட் சேவை நேற்று துவக்கப்பட்டுள்ளது.பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் இணைச் செயலரும், வெளியுறவு அமைச்சக தலைமை பாஸ்போர்ட் அதிகாரியுமான கே.ஜே.ஸ்ரீனிவாசா, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், நடமாடும் பாஸ்போர்ட் சேவையை துவக்கி வைத்தார்.நிகழ்வில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.பாஸ்பார்ட் சேவா கேந்திரா சார்பில் ஏற்கனவே, சேவா மையங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவா மையங்கள் செயல்படுகின்றன.இந்நிலையில், கிராமப்புறங்களில் வசிக்கும் விண்ணப்பதாரர்களின் வீட்டு வாசலிலேயே சேவையை வழங்கும் வகையில், வேன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ன. அந்த வேன் இன்று முதல், சென்னை தாம்பரம் அலுவலகத்தில் இருந்து செயல்படும். படிப்படியாக, பாஸ்போர்ட் பெறுவதற்கான கால வரம்புகள் அதிகமுள்ள, அருகில் உள்ள மாவட்ட பாஸ்போர்ட் மையங்களுக்கும் செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி