மேலும் செய்திகள்
ஆவடியில் 'விடியாத' சாலை வாகன ஓட்டிகள் அதிருப்தி
24-Feb-2025
ஆவடி, ஆவடி அடுத்த வெள்ளானுார் தனியார் கல்லுாரி விடுதியில் வசிப்பவர் சையது கைசர், 20. இவர், தனியார் கல்லுாரியில், பி.காம்., - எல்.எல்.பி., நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.இவர், நேற்று அதிகாலை ராமாபுரம் சென்று, நண்பர்களுடன் விளையாடி விட்டு, 'பஜாஜ் பல்சர்' பைக்கில், நண்பன் பார்த்திபனுடன் விடுதிக்கு சென்று கொண்டிருந்தார்.ஆவடி, எச்.வி.எப்., சோலார் அணுகு சாலையில் சென்ற போது, சாலையின் குறுக்கே பைக்குடன் நின்றிருந்த மர்ம நபர்கள், இருவரையும் தாக்கி, 25,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை பறித்து சென்றனர்.இது குறித்த புகாரின்படி, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Feb-2025