இரு குழந்தைகளை கழுத்தறுத்து தாய் தற்கொலை
சென்னை: சென்னை, தேனாம்பேட்டையில் குடும்ப பிரச்னையில் தனது இரு குழந்தைகளின் கழுத்தை அறுத்து விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அவர் குடும்ப பிரச்னையில் தனது இரு குழந்தைகளின் கழுத்தை அறுத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார். தாய் உயிரிழந்த நிலையில், இரு குழந்தைகளும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.