உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார் மோதி தாய் பலி மகள் காயம்

கார் மோதி தாய் பலி மகள் காயம்

மறைமலைநகர் :சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றத்தைச் சேர்ந்தவர் தேவி, 52. இவர், ஹோட்டலில் துாய்மை பணியாளராக பணிபுரிந்தார். நேற்று காலை, மகள் மீனா, 34, என்பவருடன் சிங்கபெருமாள் கோவில் -- ஒரகடம் சாலையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலுக்குச் சென்றார்.வழிபாடு முடித்து வீட்டிற்கு நடந்து வந்தபோது, ஜி.எஸ்.டி., சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த மாருதி சுஸுகி 'ஷிப்ட் டிசையர்' கார் மோதியது.இதில், தலையில் பலத்த காயம் அடைந்த தேவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரான மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த சத்யராஜ், 23, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி