மேலும் செய்திகள்
சமையல் மாஸ்டர் பலி
12-Oct-2025
திருமங்கலம்: மழையால், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பல்லாங்குழியான 100 அடி சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது. சென்னையில் பல்வேறு சாலைகள் போக்குவரத்து லாயக்கற்ற நிலையில், படும் மோசமாக உள்ளது. குறிப்பாக, அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டு, திருமங்கலம், அண்ணா நகர் மேற்கு பகுதியில், 100 அடி சாலை உள்ளது. இச்சாலையில், மெட்ரோ பணிகள் நடப்பதால், ஏற்கனவே நெரிசல் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், பாடி பகுதியில் இருந்து, திருமங்கலத்தை நோக்கி செல்லும் பாதை, மழையால் குண்டும் குழியாக காட்சியளிக்கிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'திருமங்கலத்தில் பல இடங்களில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன் குண்டும் குழியுமான இச்சாலையில், ஸ்கூட்டரில் சென்றோர் தவறி விழுந்ததில், லாரியில் சிக்கி பெண் பலியாகினார். மற்றொரு விபத்து ஏற்படும் முன், சாலையை சீரமைக்க வேண்டும்' என்றனர்.
12-Oct-2025