உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குண்டும் குழியுமான ஆற்காடு சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

குண்டும் குழியுமான ஆற்காடு சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

வளசரவாக்கம்: வளசரவாக்கம் - போரூர் ஆற்காடு சாலை, குண்டும் குழியுமாக மாறி சகதியாக உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். போரூர், வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைப்பது ஆற்காடு சாலை. கோடம்பாக்கம் - போரூர் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. விபத்து தடுப்பு இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டு உள்ளதால், சாலை குறுகலாகி நெரிசல் ஏற்படுவதுடன், பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், மேடு, பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், அப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க சாலையில் 'மில்லிங்' செய்யப்பட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். விபத்து, உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !