உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓ.எம்.ஆரில் மெட்ரோ பாதையால் நிழலில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

ஓ.எம்.ஆரில் மெட்ரோ பாதையால் நிழலில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி 'சிப்காட்' வரை, 45 கி.மீ., துாரத்தில், 28 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் மற்றும் 19 மேம்பால ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.இதில், ஓ.எம்.ஆரில், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் முதல் சிறுசேரி வரை, 20 கி.மீ., துாரத்தில், 90 அடி இடைவெளியில், ஒரு துாண்கள் வீதம் அமைக்கப்படுகின்றன.ஒவ்வொரு துாண்களும், 45 அடி உயரம் உடையவை. இந்த பணியை, எல் அண்ட் டி மற்றும் ஆர்.வி.என்.எல்., நிறுவனம் மேற்கொள்கிறது.இந்த பணிக்காக, ஆறுவழி சாலையான ஓ.எம்.ஆர்., நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டது. துாண்கள் அமைத்து, 'பியர் கேப்' பொருத்தப்படுகிறது.இந்த வகையில், மேட்டுக்குப்பம் முதல் கண்ணகி நகர் வரை மற்றும் ஒக்கியம்மேடு முதல் காரப்பாக்கம் வரை, 1.2 கி.மீ., துாரத்தில், பியர் கேப் பொருத்தப்பட்ட 25 இடங்களில், 'யு-கிரேடர்' இணைக்கும் பணி நடக்கிறது.மெட்ரோ ரயில் பாதையால், சிறுசேரி முதல் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் வரை, காலை முதல் நண்பகல் வரை நிழலாக இருக்கும். அதேபோல், நண்பகல் மாலை வரை எதிர்திசையில் நிழல் இருக்கும். இதனால், வெயில் சுட்டெரித்தாலும், ஓ.எம்.ஆரில் நிழலில் பயணிக்க முடியும்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் பாதையில், யு -கிரேடர் அமைத்த பகுதியில் நிழலாக இருப்பதால், சோர்வு இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்ட முடிகிறது. 'ஏசி' வாகனங்கள், 20 கி.மீ., துாரம் நிழலில் செல்லும்போது, ஏசிக்கு தேவைப்படும் இன்ஜின் பயன்பாடு குறைந்து, எரிபொருள் மிச்சமாகும். வாகனத்திற்குள் வெப்பம் தாக்குவது கணிசமாக குறையும். ஏசி அல்லாத வாகனங்களிலும், கி.மீ., அதிகரிப்பதுடன், சுட்டெரிக்கும் வெயிலால் ஏற்படும் தேய்மானம் தடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை