உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சோழிங்கநல்லுார் காலி மனையில் திடீர் தீ மூச்சு திணறலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

சோழிங்கநல்லுார் காலி மனையில் திடீர் தீ மூச்சு திணறலால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

சோழிங்கநல்லுார், :சோழிங்கநல்லுார், ராஜிவ்காந்தி சாலை அருகே, தனியாருக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. இங்கு செடி, கொடிகள் மற்றும் குப்பை காய்ந்த நிலையில் இருந்தன.இந்நிலையில், நேற்று மாலை, திடீரென அந்த பகுதியில் தீ பிடித்தது. தீ மளமளவென பரவி, கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.இதனால், அப்பகுதி முழுதும் புகை மண்டலமானது. கரும்புகை பரவியதால், அப்பகுதிவாசிகளும், வாகன ஓட்டிகளும் லேசான மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர்.தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார், சுற்று வட்டார பகுதிவாசிகளிடம், வீடுகளின் ஜன்னல்களை அடைக்க அறிவுறுத்தினர். மேலும், அப்பகுதி மின் இணைப்பும் சிறிது நேரம் துண்டிக்கப்பட்டது.துரைப்பாக்கம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை