ரூ.60 லட்சத்தில் பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு
அண்ணா நகர், சூளைமேடில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடம், பயன்பாட்டிற்கு வந்துள்ளது.அண்ணா நகர் மண்டலம், 106வது வார்டு, சூளைமேடு, என்.ஜி.ஓ., காலனி, இரண்டாவது தெருவில், பழைய கட்டடத்தில் மாநகராட்சி அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது.இக்கட்டடத்தை, மத்திய சென்னை எம்.பி.,யின் நிதியான, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்நோக்கு மைய கட்டடமாக மாற்றி கட்டப்பட்டது. இக்கட்டடம் நேற்று முதல், பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மொத்தம், 1,390 சது ரடிபரப்பளவில், தரைத்தளம்மற்றும் முதல் தள கட்டடம், திறந்தவெளி சிறுவர்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.