உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டு வரி பெயர் மாற்ற 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: நகராட்சி பில் கலெக்டர் கைது

வீட்டு வரி பெயர் மாற்ற 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: நகராட்சி பில் கலெக்டர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய, லஞ்சம் வாங்கிய திருவேற்காடு நகராட்சி 'பில்' கலெக்டர் கைது செய்யப்பட்டார்.திருவேற்காடு, நடேசன் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், 43. இவர், அதே பகுதியில் இரண்டு தளங்கள் மற்றும் 3,000 சதுர அடி உடைய பழைய வீட்டை சமீபத்தில் வாங்கியுள்ளார். அதற்கு, வரி செலுத்துவதற்கு ஏதுவாக, பெயர் மாற்றம் செய்ய, கடந்த மார்ச் 10, 16ம் தேதிகளில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அப்போது, பெயர் மாற்றம் செய்வதற்கு, 'பில்' கலெக்டர் உமாநாத், 35, லஞ்சமாக 40,000 ரூபாய் கேட்டுள்ளார்.கடந்த 24ம் தேதி பேசும்போது, 25,000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்யப்படும் என, உமாநாத் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகதீஷ், இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தார். அவர்கள், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெகதீஷிடம் கொடுத்து அனுப்பினர்.ஜெகதீஷிடம் இருந்து அந்த பணத்தை உமாநாத் வாங்கும்போது, நகராட்சி அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான போலீசார், அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

V RAMASWAMY
ஜூன் 28, 2025 08:39

இறை வழிபாடின்மை, நல்லொழுக்கம் கற்றுத்தர மறுக்கும் பள்ளிகள், பெற்றோர்கள், தீய செயல்களை பாராட்டி போதிக்கும் சினிமா டிவி நிகழ்ச்சிகள், நல்லொழுக்கமில்லா பல அரசியல்வாதிகள், படிக்காமலேயே தேர்வில்லாமலேயே மேல் வகுப்புகளுக்கு அனுப்பப்படும் கோளாறுகள், சாதியில்லா சமத்துவம் என்கிற பொய்த்தனமான போர்வையில் தகுதியற்றவர்களுக்கு பணி, இவை இம்மாதிரி லஞ்சப்பேய்களைத்தான் வளர்க்கும், அவர்களுக்கு ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கும்.


M S RAGHUNATHAN
ஜூன் 27, 2025 16:58

Effect of quota


Padmasridharan
ஜூன் 27, 2025 13:32

செத்தாக்கூட பணமாக்கி கொண்டாடுகிற கூட்டம்தான் இப்ப அரசாங்கத்துல. . பலர் uniform ஓட இருக்காங்க. மத்தவங்களுக்கு இல்ல, அவ்வளவுதான் வித்யாசம். பிறப்பும் இறப்பும் இப்ப பண packages வழியில்தான் நாடு


RAJ
ஜூன் 27, 2025 09:56

போலீஸ்கர் அவன் வாயிலியே மிதிங்க..


தமிழ் நாட்டு அறிவாளி
ஜூன் 27, 2025 09:41

லஞ்சம் வாங்கியதில் ஒருநாளாவது தன் பிள்ளைகளுக்கு ஏதும் செய்து இருப்பாய். பிள்ளைகளை நீங்கள் தான் பெற்றீர்கள் எனில் உங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கி கொடுங்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 27, 2025 09:40

இவர் மீது நடவடிக்கை எடுத்ததாக செய்தி வருகிறது. மறுநாளே நடவடிக்கை கைவிடப்பட்டு மீண்டும் பணியில் அமர்வது பற்றிய செய்தி வெளியாவதில்லை


V RAMASWAMY
ஜூன் 27, 2025 09:32

கருட புராணம் என்றொரு நூல் இருக்கிறது. அதனைப்படித்தால் தெரியும் என்னென்ன குற்றங்களுக்கும் எவ்வித தண்டனைகள் காத்திருக்கிறதென்று ஜென்ம ஜென்மத்திற்கும் எவ்வித குற்றமும் புரிய நடுக்கம் வரும், ஆனால், நம்பமாட்டார்கள், படிக்கமாட்டார்கள்.


பிரேம்ஜி
ஜூன் 27, 2025 10:22

கடவுள் இல்லை என்பவர்கள் கருட புராணம் படிக்கவும் மாட்டார்கள். தவறு செய்ய தயங்கும் மாட்டார்கள்.


J.லட்சுமணன்
ஜூன் 27, 2025 09:19

இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?


Kulandai kannan
ஜூன் 27, 2025 08:23

சேவை எண்ணம் கொண்டவர்களை மட்டுமே அரசு வேலைகளுக்கு நியமிக்க வேண்டும்


V Venkatachalam
ஜூன் 27, 2025 09:30

திருட்டு தீயமுக 50 வருஷ ஆட்சியில் லஞ்சம் எழுதப்படாத சட்டமாக்க பட்டு விட்டது. லஞ்சம் வாங்குபவனுக்கு ஒரு சோஷியல் அந்தஸ்து கிடைக்கிறது. லஞ்சம் என்பது கட்டண கழிப்பறை மாதிரி ஆகிவிட்டது. இன்னும் சில வருஷங்களில் பணம் இருந்தால் உள்ளே வரவும் ன்னு வெளிப்படையாக ஒரு போர்டு வச்சிடுவானுங்க. நான்காண்டு நல்லாட்சி அதற்கு இதுவே சாட்சி.


முக்கிய வீடியோ