உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொலை குற்றவாளி சிக்கினார்

கொலை குற்றவாளி சிக்கினார்

சென்னை, கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.சிந்தாதிரிப்பேட்டையில், கடந்த 2022 மே 24ம் தேதி பாலச்சந்தர் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், கலைராஜ், 28, என்பவரை கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த கலைராஜ் தலைமறைவானார்.தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால், 19ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை