உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மாணவியிடம் அத்துமீறல் இசை ஆசிரியர் கைது

 மாணவியிடம் அத்துமீறல் இசை ஆசிரியர் கைது

திருவொற்றியூர்: மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இசையாசிரியரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூரைச் சேர்ந்தவர் 20 வயது கல்லுாரி மாணவி. இவர், நேற்று திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலம் அருகில் உள்ள மருந்து கடைக்கு, தலைவலி மாத்திரை வாங்க சென்றார். அப்போது பைக்கில் வந்த நபர், கல்லுாரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து, காலடிப்பேட்டை, மேட்டு தெருவைச் சேர்ந்த இசையாசிரியர் பீட்டர், 30 என்பவரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை