உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதியவர் கவனத்தை திசை திருப்பி ரூ.6,000 திருடிச்சென்ற மர்ம நபர்கள்

முதியவர் கவனத்தை திசை திருப்பி ரூ.6,000 திருடிச்சென்ற மர்ம நபர்கள்

அம்பத்துார், அம்பத்துார், புதுாரை சேர்ந்தவர் மனோகரன், 31. பால், ஐஸ்கிரீம் விற்பனை கடை நடத்தி வருகிறார். அவரது கடையில், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா, 75, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை 10:15 மணியளவில், கடைக்கு வந்த இருவர், ஐஸ்கிரீம் வாங்கி கொண்டு, பாக்கி பணத்தை சில்லரையாக கேட்டுள்ளனர்.அப்போது, முதியவரின் கவனத்தை திசை திருப்பி, கல்லாப்பெட்டியில் இருந்து, 6,000 ரூபாயை திருடி சென்றனர். கல்லாப்பெட்டியில் பணம் குறைவாக இருந்ததை பார்த்த மனோகரன், 'சிசிடிவி' காட்சியை ஆய்வு செய்தார். அதில், மர்ம நபர்கள் பணத்தை திருடியது தெரிந்தது. அம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி