உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீசார் போர்வையில் பணம் பறித்த மர்ம நபர்கள்

போலீசார் போர்வையில் பணம் பறித்த மர்ம நபர்கள்

சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கென்னத் பகுதியில் பணம் பரிமாற்றம் செய்யும் அலுவலகம் நடத்தி வருபவர் ரியாசுதீன், 43. இவர், நேற்று முன்தினம், இரு சக்கர வாகனத்தில் எழும்பூரில் இருந்து மண்ணடிக்கு செல்ல புறப்பட்டார்.சிந்தாதிரிப்பேட்டை, கிழக்கு கூவம் சாலைக்கு வரும்போது, மர்ம நபர்கள் இருவர் ரியாசுதீனை மடக்கினர். தங்களை போலீஸ் எனக்கூறி அறிமுகப்படுத்தியவர்கள், நீங்கள் கணக்கில் வராத 'ஹவாலா' பணம் கொண்டு செல்கிறீர்கள் எனக் கூறி மிரட்டினர்.பின், அவரிடம் இருந்த 10,000 ரூபாய் மதிப்பிலான 'யூரோ' பணத்தை பறித்து தப்பினர். இது குறித்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசில் ரியாசுதீன் புகார் அளித்தார்.அப்போது தான், போலீஸ் வேடத்தில் மர்ம நபர்கள் பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை