உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேரூராட்சி திட்டத்திற்கு எதிர்ப்பு நல்லுார் வாசிகள் சாலை மறியல்

பேரூராட்சி திட்டத்திற்கு எதிர்ப்பு நல்லுார் வாசிகள் சாலை மறியல்

செங்குன்றம், தமிழகம் முழுதும் உள்ள பல்வேறு ஊராட்சிகளை, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் இணைத்து, சமீபத்தில் அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், சோழவரம் பி.டி.ஓ., அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள நல்லுார் ஊராட்சியை, பாடியநல்லுார் ஊராட்சியுடன் இணைத்து, பேரூராட்சியாக தரம் உயர்த்த அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு நல்லுார் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து பகுதி மக்கள் கூறியதாவது:எங்களது ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தினால், 100 நாள் வேலை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் பறிபோகும். அதை நம்பி, 40,000க்கும் மேற்பட்டோர் உள்ளோம். எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.மேலும் வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி, அனுமதி சான்று கட்டணம் போன்றவை பன்மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.மறியலில் ஈடுபட்டோரிடம் போலீசார் பேச்சு நடத்தினர். அதிகாரிகளிடம் முறையிடுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை