உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நங்கநல்லுார் மெட்ரோ பெயர் மாற்றம்

நங்கநல்லுார் மெட்ரோ பெயர் மாற்றம்

சென்னை, -சென்னை ஜி.எஸ்.டி., சாலையில், நங்கநல்லுார் சாலை மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகில், ஒ.டி.ஏ., எனும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் செயல்படுகிறது.எனவே, 'நங்கநல்லுார் சாலை மெட்ரோ ரயில் நிலையம்' என்ற பெயரை, 'ஒ.டி.ஏ., நங்கநல்லுார் சாலை மெட்ரோ ரயில் நிலையம்' என மாற்றும்படி, ராணுவ உயர் அதிகாரிகள், தமிழக அரசு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.அதை ஏற்று, 'நங்கநல்லுார் சாலை மெட்ரோ ரயில் நிலையம்' என்ற பெயரை, 'ஓ.டி.ஏ., நங்கநல்லுார் சாலை மெட்ரோ ரயில் நிலையம்' என, பெயர் மாற்ற அனுமதி அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை