உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய வில்வித்தை சென்னை சிறுவன் பங்கேற்பு

தேசிய வில்வித்தை சென்னை சிறுவன் பங்கேற்பு

சென்னை, தேசிய வில்வித்தை போட்டியில், சென்னை சிறுவன் பங்கேற்றுள்ளார். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான, 54வது தேசிய வில்வித்தை போட்டிகள், ஹைதராபாதில் உள்ள பேகம்பேட்டை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேற்று துவங்கின. இதில், நாடு முழுதும் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், சூளைமேடு, கில் நகர், கே.வி., பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர் ஹேமத், 13, என்பவர், தமிழக அணிக்காக பங்கேற்றுள்ளார். இவர், இன்று நடக்கும் 14 வயதுக்கு உட்பட்ட 'இந்தியன் போ' சுற்றில் பங்கேற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி