மேலும் செய்திகள்
தேசிய வில்வித்தை போட்டி கும்மிடி மாணவியர் தேர்வு
20-Aug-2025
சென்னை:மத்திய இடைநிலை கல்வி வாரியம் எனும் சி.பி.எஸ்.இ., சார்பில் பள்ளிகளுக்கு இடையே தேசிய தடகள போட்டி, உ.பி., மாநிலம் வாரணாசியில் நடந்து வருகிறது. இதில், நாடு முழுதிலும் இருந்து 1,500க்கும் அதிகமான மாணவ - மாணவியர் பங்கேற்றனர். போட்டி 14, 17, 19 வயது பிரிவுகளுக்கு நடந்தது. இதில் 'யு - 17' பிரிவில், பீல்டுதடகள போட்டியில் ஒன்றான 110 மீ., தடை தாண்டுதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த ஈத்தன் ஜீவன், போட்டி துாரத்தை 15.92 வினாடியில் கடந்து மூன்றாம் இடம் பிடித்து, வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். முதல் இடத்தில், வட இந்தியாவின் ராகுல், போட்டி துாரத்தை 15.30 வினாடியில் கடந்து, தங்கப் பதக்கம் வென்றார். இரண்டாவது இடத்தில், மஹாராஷ்டிராவின் ரிகாவ் காலா, 15.87 வினாடியில் கடந்து, வெள்ளி பதக்கம் பெற்றார். போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
20-Aug-2025