தேசிய பூப்பந்து போட்டி: அரசு பள்ளி தகுதி
சென்னை:தேசிய பூப்பந்து போட்டியில், காலிறுதியில் வெற்றிபெற்ற மாமல்லபுரம் அரசு பள்ளி அணி, சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றது.செங்கல்பட்டு, காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி சார்பில், தேசிய அளவிலான பூப்பந்து போட்டிகள் நடக்கின்றன. நேற்று காலை நடந்த காலிறுதி ஆட்டத்தில், திருவிடைமருதுார் டி.ஏ.எச்.எஸ்., பள்ளி அணி, மதுரை டி.வி.கே., பள்ளியை தோற்கடித்தது.மற்றொரு போட்டியில், மாமல்லபுரம் அரசு பள்ளி, எஸ்.ஆர்.கே., வித்யாலயா பள்ளியை தோற்கடித்தது.அதேபோல், ஸ்ரீரங்கம் எச்.எஸ்.எஸ்., பள்ளி, அரியலுார் பொன்பரப்பி அரசு பள்ளியை வீழ்த்தியது. இந்து பள்ளி, திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளியை வென்றது. வெற்ற பெற்ற அணிகள், 'சூப்பர் லீக்' சுற்றுக்கு தகுதி பெற்றன.