தேசிய சப் - ஜூனியர் ஹாக்கி சென்னையில் நாளை துவக்கம்
சென்னைஹாக்கி இந்தியா ஆதரவில், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், ஆடவருக்கான 15வது சப் - ஜூனியர் ஹாக்கி போட்டி, சென்னையில் நாளை துவங்க உள்ளது. போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கின்றன. நாடு முழுதும் இருந்து, 29 மாநில அணிகள் பங்கேற்கின்றன. அணிகள், ஏ, பி, சி, டி என நான்கு 'டிவிஷன்'களாக பிரித்து, மொத்தம் 49 போட்டிகள் வீதம் நடக்கின்றன. 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, ஏழு போட்டிகள் நடக்கின்றன. ஆக., 6ம் தேதி அரையிறுதியும், 8ம் தேதி இறுதிப் போட்டியும் நடக்க உள்ளன. தமிழக அணி, தனது முதல் போட்டியை, ஆக., 1ம் தேதி ஹரியானாவுடன் எதிர்கொள்கிறது.