உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தேசிய மகளிர் கால்பந்து: அரையிறுதியில் தமிழகம்

 தேசிய மகளிர் கால்பந்து: அரையிறுதியில் தமிழகம்

சென்னை: அகில இந்திய கால்பந்து சங்கம் மற்றும் ஆந்திர மாநில கால்பந்து சங்கம் இணைந்து, மகளிருக்கான தேசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியை, ஆந்திர மாநிலத்தின் அனந்தபூரில் நடத்தி வருகின்றன. இதன் 'ஏ' பிரிவில் இடம் பெற்ற தமிழக அணி அரையிறுதியில், மணிப்பூர் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் புள்ளி அடிப்படையில் சமமாக இருப்பதால், இன்றைய போட்டி தமிழக அணிக்கு சவாலாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அணியின் தலைமை பயிற்சியாளர் கூறியதாவது: தமிழக அணி, லீக் போட்டிகளில் எதிர்பார்ப்புக்கு மேல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆந்திரா போன்ற திறமையான அணிகளை வீழ்த்தியது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த தேசிய தொடரின் அரையிறுதி போட்டியில், ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக தமிழக அணி தோற்று வெளியேறியது. ஆனால், இந்த முறை, அணியில் சிறந்த மாற்றங்களை செய்துள்ளோம். மணிப்பூர் அணி, 'அட்டாக்' மற்றும் 'மிட்' திசையில் சிறப்பாக செயல்படும் அணி. அதற்கு ஏற்ப, 'டிபென்ஸ்' மற்றும் 'பார்வர்டு' திசையில் அதிக கவனம் செலுத்த உள்ளோம். மேலும் அதிகளவில் 'கவுன்டர் அட்டாக்' கொடுக்க பயிற்சி மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ