இன்று இயற்கை சந்தை
சென்னை, .மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை, நகர பகுதியில் விற்பனை செய்ய, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாதமும் வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில், நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் 'இயற்கை சந்தை' நடக்கிறது. நாளை துவங்கி, இரு நாட்கள் இயற்கை சந்தை நடைபெற உள்ளது.இதில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களான, பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், சிறுதானிய மதிப்புக் கூட்டு மற்றும் பனை ஓலை பொருட்கள், காய்கறி, கீரை வகைகள் போன்ற இயற்கை சார்ந்த பொருட்களும், பல்சுவை உணவுப் பொருட்களும் கிடைக்கும்.