மேலும் செய்திகள்
தன்னம்பிக்கையை மட்டும் விட்டுடாதீங்க!
06-Oct-2025
சென்னை, பெரிதான காது துளைக்கு, அழகு நிலையம் அளித்த இயற்கை முறை சிகிச்சையால், பெண் ஒப்பனை கலைஞர் காதுகளை இழந்துள்ளார். அவருக்கு, தனியார் அழகு நிலையம், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், முகப்பேரை சேர்ந்த ஒப்பனை கலைஞர் ஜெயந்தி தாக்கல் செய்த மனு: அரும்பாக்கத்தில், 'அபே ஹெர்பல்' என்ற பெயரில் அழகு நிலையம் உள்ளது. அங்கு விற்கப்படும் அழகு நிலையங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினேன். அப்போது, 'உங்கள் காது துளை பெரிதாக உள்ளது. இதை இயற்கை முறையில் சரி செய்யலாம்' என, அழகு நிலைய உரிமையாளர் அகிலாண்டேஸ்வரி கூறினார். இதை நம்பி, 2023 மார்ச் 30ல், 2,000 ரூபாய் செலுத்தி சிகிச்சை பெற்றேன். சிகிச்சைக்கு பின், காதில் எரிச்சல் ஏற்பட்டது. ஒரு மாதத்துக்கு பின், இரண்டு காது மடல்களும் கிழிந்தது. காது மடல்களில் இருந்த துளைகளை சரிசெய்ய தடவிய ரசாயன மருந்தால், காது முழுதும் பாதிக்கப்பட்டது. பின், தனியார் மருத்துவமனையில், 'பிளாஸ்டிக் சர்ஜரி' சிகிச்சை பெற்றேன். எனவே, தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 15 லட்சம் ரூபாய், சிகிச்சை செலவு தொகை, 10 லட்சம் ரூபாய், வழக்கு செலவு 50,000 ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை, நீதிபதி டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், ஆணையம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் புகார் குறித்து, அரும்பாக்கம் போலீசார் விசாரித்து, எழும்பூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். சிகிச்சைக்கு, 'ட்ரைக்ளோரோ அசிடிக் அமிலம்' பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதில், அறிவியல் பூர்வமாக, அரிக்கும் தன்மை கொண்ட ரசாயனப் பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. அழகு நிலையத்தை மட்டுமே நடத்தும் இவர்கள், இயற்கை முறை சிகிச்சை என்ற பெயரில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சிகிச்சையை எப்படி செய்தனர் என்பது குழப்பமாக உள்ளது. போலி டாக்டரை போல செயல்பட்டதாக தெரிகிறது. காதுகளை அகற்றிய பின், தன் முகம் சிதைந்து விட்டதாக புகார்தாரர் கூறுகிறார். ஒப்பனை கலைஞராக உள்ள புகார்தாரரின் முகம் சிதைந்ததால், வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை இழந்துள்ளார். அழகு நிலையத்தின் அலட்சியத்தால் புகார்தாரர் நிதி, சமூகம், மனம் மற்றும் உடல் ரீதியாக விவரிக்க முடியாத துன்பங்களை சந்தித்துள்ளார். எனவே, சேவை குறைபாடுக்கு இழப்பீடாக, 5 லட்சம் ரூபாய்; வழக்கு செலவாக, 5,000 ரூபாயை, அழகு நிலைய உரிமையாளர் இரண்டு மாதத்துக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
06-Oct-2025