உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நெசப்பாக்கம் எரிவாயு தகன மேடை மூடல்

நெசப்பாக்கம் எரிவாயு தகன மேடை மூடல்

நெசப்பாக்கம், கோடம்பாக்கம் மண்டலம், 137வது வார்டு, நெசப்பாக்கம் ஏரிக்கரை தெருவில், மாநகராட்சி எரிவாயு தகன மேடை உள்ளது.இதன் பழைய ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், மாநகராட்சி சார்பில் புது ஒப்பந்தம் கோரப்பட்டு, பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், எரிவாயு தகன மேடையில் உள்ள 'பர்னர்' மற்றும் உடல் எரிக்கும் போது புகை வெளியேறும் சிம்னி ஆகியவை பழுதடைந்தது தெரியவந்தது. இதனால், எரிவாயு தகன மேடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பழுதை சீரமைக்க 96 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !