டவர் பூங்கா எதிரில் கீதம் உணவகம் புதிய கிளை
சென்னை, சென்னை அண்ணா நகர் டவர் பூங்கா எதிரில், கீதம் உணவகத்தின் புதிய கிளை துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கீதம் உணவகங்கள் குழுமத்தின் நிறுவனர் முரளி கூறியதாவது: கீதம் குழுமம் அண்ணா நகர் டவர் பூங்கா எதிரில், இம்மாதம், 12ம் தேதி புதிய கிளையை துவக்கி உள்ளது. சென்னையின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, எங்கள் சுவையான உணவுகளை வழங்க விரும்பினோம். எங்கள் நிறுவனத்தின் விரிவாக்கமாக, புதிய கிளையை துவங்குவதற்கு, சரியான இடமாக அண்ணா நகர் அமைந்தது. புதிய கிளையில், நேர்த்தியான உணவு அனுபவத்தை, சென்னையின் துடிப்புமிக்க கலாசார அம்சங்களோடு மக்களுக்கு வழங்கும். தெவிட்டாத சுவையுடன், மனதுக்கு நிறைவை அளிக்கும், 600க்கும் அதிகமான உணவு வகைகள் இங்கு கிடைக்கும்.இங்கு, எங்களின் விருந்து மற்றும் உணவு அனுபவத்தை மேலும் உயர்த்தி இருக்கிறோம். மக்கள் அனைவருக்கும் இனிய உணவுகளின் வாயிலாக, கனிவான சேவையை வழங்க காத்திருக்கிறோம். காலை, 6:00 மணி முதல், அதிகாலை, 2:00 மணி வரை இந்த உணவகம் இயங்கும். உணவு வகைகளை ஆர்டர் செய்வதற்கு, 73972 22111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.