ரூ.14 கோடி மதிப்பீடில் புது பஸ் நிலைய பணி
திருவொற்றியூர்திருவொற்றியூரில், 14 கோடி ரூபாய் செலவில், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துவங்கி நடக்கின்றன. திருவொற்றியூர், மாணிக்கம் நகர் பிரதான சாலையில், பேருந்து நிலையம், பணிமனை செயல்பட்டு வந்தன. இங்கிருந்து பிராட்வே, வள்ளலார் நகர், கோயம்பேடு, எழும்பூர், பூந்தமல்லி தடங்களில், தினசரி 88 பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. பேருந்து நிலையம் படுமோசமாக இருந்ததால் புது பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில், 14 கோடி ரூபாய் செலவில், 1.75 ஏக்கர் பரப்பில், புதிய பேருந்து நிலையம், பணிமனை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. திருவொற்றியூர் மெட்ரே ரயில் நிலையம் அருகேயே, பேருந்து நிலையம், பணிமனை அமையும் பட்சத்தில் பயணியர் பயனடைவர். அடுத்த ஆண்டிற்குள் புது பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என, தெரிகிறது.