உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோதண்டராமர் கோவில் தெருவில் ரூ.1.84 கோடியில் புது வடிகால்வாய்

கோதண்டராமர் கோவில் தெருவில் ரூ.1.84 கோடியில் புது வடிகால்வாய்

மேற்கு மாம்பலம்:மேட்லி சுரங்கப்பாதையில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர், கோதண்டராமர் கோவில் தெருவில் தேங்கும் பிரச்னைக்கு தீர்வாக, 1.84 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோடம்பாக்கம் மண்டலம், 140வது வார்டு மேற்கு மாம்பலத்தில், கோதண்டராமர் கோவில் தெரு உள்ளது. ஒவ்வொரு பருவமழைக்கும் தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் சேகரமாகும் மழைநீர், மின் மோட்டார் மூலம், சுரங்கப்பாதை அணுகு சாலை, கோதண்டராமர் கோவில் தெரு மழைநீர் வடிகால்வாய் வழியாக, ரெட்டிக்குப்பம் கால்வாய்க்கு செல்கிறது.இதில், கோதண்டராமர் கோவில் தெரு, சென்னை மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள மழைநீர் வடிகால்வாயின் மூன்று இடங்களில், மேல் மூடி வழியாக மழைநீர் வெளியேறி, சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது.ஒவ்வொரு மழைக்கும் இப்பகுதியில் மழைநீர் தேங்கி வருவதால், பகுதிமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.இதையடுத்து மாநகராட்சி சார்பில், கோதண்டராமர் கோவில் தெருவில் 1.8 கோடி ரூபாய் செலவில், 520 மீட்டர் துாரத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இப்பணி முடிந்ததும், அத்தெருவில் மழைநீர் தேங்காது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ