பீட்டர் சாலை மேம்பாலம் கீழ் ரூ.3.37 கோடியில் புது வசதிகள்
சென்னை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதி, 3.37 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படுகிறது. கிண்டி, கத்திப்பாரா மேம்பாலத்திற்கு கீழ் மெட்ரோ நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு சதுக்கம், மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதை முன்மாதிரியாக வைத்து, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மேம்பாலத்தின் கீழ், 3.37 கோடியில் மேம்படுத்தும் பணியை, மாநகராட்சி அதிகாரிகள் துவங்கி உள்ளனர். பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பாதை, சிறுவர்களுக்கான திடல், வண்ண விளக்குகள் உள்ளிட்டவற்றை அமைக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'பீட்டர் சாலை மேம்பாலத்தின் கீழ், நடைபாதை, கழிப்பறை, விளையாட்டு திடல், வாகன நிறுத்துமிடம், இருக்கைகள், வண்ண மலர் பூச்செடிகள் அமைக்கப்பட உள்ளன. இப்பணி, ஒன்றரை மாதத்திற்குள் முழுமையாக முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்' என்றனர்.