சைதை மெட்ரோவில் புது வாயில் திறப்பு
சென்னை: சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், கூடுதல் நுழைவாயில் நேற்று திறக்கப்பட்டது. சென்னையில் இயக்கப் படும் இரண்டு வழித் தடங்களில் ஒன்று, விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் பாதை. இத்தடத்தில், பயணி யர் அதிகம் வரும் நிலையமாக, சைதாப்பேட்டை உள்ளது. இங்கு, மாநகர பேருந்து நிலையம், தாடண்டர் பகுதி உள்ளது. இங்கிருந்து வரும் பயணியர் வசதிக்காக, சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், தாடண்டர் நகர் நோக்கிச் செல்லும் வகையில், கூடுதலாக ஒரு நுழைவுவாயில், நேற்று திறக்கப்பட்டது. இந்த வசதியை, மெட்ரோ ரயில் பயணியரில் ஒருவரான தில்ஷத் பானு, திறந்து வைத்தார். இந்த நிகழ்வில்சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை ஆலோசகர் மால்யா, பொது மேலாளர் சதீஷ் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.