உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விண்ணில் பாயும் புது ராக்கெட் மே 18ல் கடலுக்கு செல்ல தடை

விண்ணில் பாயும் புது ராக்கெட் மே 18ல் கடலுக்கு செல்ல தடை

சென்னை, 'ஸ்ரீஹரிகோட்டாவில், பி.எஸ்.எல்.வி., -சி - 61 எனும் ராக்கெட், விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், வரும் மே 18ம் தேதி, பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது' என, மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:பாகிஸ்தான், சீனா எல்லைகளை கண்காணிக்கும் வகையில், இஸ்ரோ சார்பில், 'ரிசாட் - 1பி' ரேடர் இமேஜிங் எனும் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி - 61 எனும் ராக்கெட் வாயிலாக, 'ரிசாட் - 1பி' செயற்கைக்கோள், வரும் மே 18ம் தேதி, காலை 6:59 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக, அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதனால், ராக்கெட் ஏவும் காலம் மற்றும் சோதனைக்கு உட்படுத்தும் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்ட மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிக்குள், மீனவர்கள் யாரும் மீன்பிடி தொழிலுக்கு செல்ல கூடாது.எனவே, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், வரும் மே 18ம் தேதி காலை முதல், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ