புதிதாக நிழற்குடை அமைப்பு
சென்னை: தேனாம்பேட்டை மண்டலம், கோபாலபுரத்தில் கான்ரான் ஸ்மித் சாலையில், கோபாலபுரம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு நவீன நிழற்குடை அமைக்க 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன. ஒப்பந்ததாரர், நிழற்குடை அமைப்பதற்காக துாண்களை மட்டும் அமைத்து, அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ளாமல் விட்டுச் சென்றார். இதனால் பயணியர் வெயிலிலும், மழையிலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து, நம் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானதை அடத்து, புதிய நிழற்குடையை மாநகராட்சியினர் அமைத்துள்ளனர்.