உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீரிழிவு நோயின் புதிய வகை கண்டுபிடிப்பு: டாக்டர் மோகன்

நீரிழிவு நோயின் புதிய வகை கண்டுபிடிப்பு: டாக்டர் மோகன்

சென்னை, ''உலகளவில் நீரிழிவு நோயின் புதிய வகையிலான, 'மோனோஜெனிக்' நீரிழிவு நோய் கண்டறியப்பட்டுள்ளது,'' என, மெட்ராஸ் டயாபடீஸ் ரீசர்ச் பவுண்டேஷன் தலைவர் மோகன் கூறினார்.இதுகுறித்து, டாக்டர் மோகன் கூறியதாவது:நீரிழிவு நோயில் பெரும்பாலும் டைப் - 1 மற்றும் டைப் - 2 ஆகிய வகைகள் உள்ளன. இதில், இளம் வயதினரை பாதிக்கும், 'மெச்சூரிட்டி ஆன்சைட் டயாபடீஸ் ஆப் தி யங்' என்ற மோதி வகையில், 14 வகையான பாதிப்புகள் ஏற்கனவே உள்ளன.இந்நிலையில், மெட்ராஸ் டயாபடீஸ் ரீசர்ச் பவுண்டேஷன் மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை மருத்துவ பள்ளியுடன் இணைந்து, புதிய வகை நீரிழிவு நோய் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதன்படி இந்தியாவில், பல்வேறு பகுதிகளில் மாறுப்பட்டு காணப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு மரபணு பரிசோதனை செய்யப்பட்டது.அதில், 20 பேருக்கு, மோதி வகையான, 'மோனாஜெனிக்' என்ற நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது, மோதி டைப்பில், 15வது வகையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வகை நீரிழிவு, 18 வயது முதல், 34 வயது உடையவர்களை பாதிக்கிறது. இதற்கு, இன்சுலின் ஊசி தேவைப்படுவதில்லை.மேலும், வழக்கமாக கொடுக்கப்படும், 'சல்போனில்யூரியாஸ்' மருந்தும் பலன் அளிப்பதில்லை. அதேநேரம், மற்ற வகை மாத்திரைகள் உள்ளன.அதில், எந்த வகை மாத்திரைகள், இவ்வகை நீரிழிவுக்கு தீர்வாக இருக்கும் என்பதை மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. நீரிழிவு நோயின் புதிய வகைகள் கண்டறியும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.எனவே, அனைத்தும் நீரிழிவு நோய் தான் என இருந்துவிடாமல், எவ்வகை பாதிப்பு, அதற்கு எந்தமாதிரியான சிகிச்சை பெற வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை