மேலும் செய்திகள்
10 கிலோ கஞ்சா பறிமுதல் மே.வங்க நபர்கள் சிக்கினர்
21-Aug-2025
10 கிலோ கஞ்சா செங்குன்றத்தில் பறிமுதல் செங்குன்றம்: செங்குன்றம், மொண்டியம்மன் நகர் சோதனைச் சாவடி அருகே கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்தர், 38, என்பவரை, செங்குன்றம் மது விலக்கு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர், ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த 10.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சைக்கிள் திருடன் சிக்கினான் புளியந்தோப்பு: புளியந்தோப்பு பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 41. நேற்று முன்தினம் இவரது மகனின் சைக்கிள் திருட்டு போனது. இது குறித்து விசாரித்த போலீசார், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, 36, என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மூன்று சைக்கிள் மீட்கப்பட்டது. பஸ் மோதி இளம்பெண் காயம் வண்ணாரப்பேட்டை: வியாசர் பாடி, எம்.பி.எம்., தெருவைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தன் தாய் திலககுமாரியுடன், 55, சுசூகி ஆக்சஸ் ஸ்கூட்டரில், நேற்று வியாசர்பாடியில் இருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி சென்றார். வண்ணாரப்பேட்டை, நாராயணப்ப பள்ளி அருகே வந்தபோது முன்னால் சென்ற பேருந்தில், எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மோதியது. இதில் தாய் மற்றும் மகள் கீழே விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பினர்.
21-Aug-2025