செய்திகள் சில வரிகளில்
ராதா நகர் சுரங்கம் தயார்
சென்னை: குரோம்பேட்டை, ராதா நகரில், பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்கும் வகையில், இருவழிப்பாதையுடன் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இச்சுரங்கப்பாதை விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இப்பணிகள் முடிந்ததை அடுத்து, அதில் நேற்று, வாகனங்களை ஓட்டி சோதனை நடத்தப்பட்டது.
ரயிலில் போன் திருடும்
ஒடிஷா கும்பல் கைது
சென்னை: ஆவடி அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்த ஜனனி, 20, ஆக., 4ல் இரவு பணி முடித்து, மின்சார ரயிலில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்து கல்லுாரி ரயில் நிலையத்தில் அவரது சாம்சங் போனை மர்ம நபர்கள் திருடினர். இந்நிலையில், ஆவடி ரயில் நிலையத்தில் திரிந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த ராஜாதாஸ், 30, வாசுதேவ் யாதவ், 27, விக்கியாதவ், 35, ஆகியோரை, ஆவடி ரயில்வே போலீசார், நேற்று கைது செய்தனர். ரயிலில் கஞ்சா கடத்திய
சகோதரர்கள் கைது
அம்பத்துார்: கொரட்டூர் ரயில் நிலையம் அருகே, கஞ்சா விற்ற அசாம் மாநிலம், கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த ஐனுல் ஹக், 23, மற்றும் மொய்னுல் அலி, 22, ஆகியோரை, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். சகோதரர்களான அவர்களிடம் இருந்து, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.