மேலும் செய்திகள்
6.5 சவரன் நகை சித்தாமூரில் திருட்டு
08-Oct-2025
வீடு புகுந்து 2 சவரன் நகை திருட்டு பெர ம்பூர்: பெரம்பூர், நெட்டால் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 35; பேன்சி ஸ்டோர் ஊழியர். நேற்று முன்தினம் பாலாஜி வேலைக்கும், அவரது மனைவி சங்கீதா கடைக்கு சென்று, இரவு 9:00 மணியளவில் வீடு திரும்பி உள்ளார். அப்போது, கதவை திறந்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, 2 சவரன் நகை, 50 கிராம் வெள்ளி மற்றும் 10,000 ரூபாய் திருடி சென்றது தெரிந் தது. இ - சிகரெட் விற்பனை 4 பேர் கைது திருவல்லிக்கேணி: திரு வல்லிக்கேணி லால் பேகம் தெருவில் உள்ள தங்கும் விடுதியில், திருவல்லிக்கேணி போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட, எலக்ட்ரானிக் சிகரெட் எனும் இ - சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன், 28, திருவல்லிக்கேணி முகமது அஜிஸ்வுல்லா, 32, காதர் உசேன், 34, வியாசர்பாடி அன்சாரி, 28 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 83 இ - சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நீதிமன்றத்திற்கு டிமிக்கி கொடுத்த குற்றவாளி கைது திருமங்கலம்: கடந்த 2024ம் ஆண்டு, வழிப்பறி வழக்கில் பழைய திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக, 29, என்பவர் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளிவந்தவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகினர். இதையடுத்து, கடந்த 10ம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில், திருமங்கலம் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். லாரி மோதி வாலிபர் பலி எண்ணுார் : எர்ணாவூர், மகாலட்சுமி நகர் ஐந்தாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் டேவிட், 35. நேற்று மாலை, மணலி விரைவு சாலை - முல்லை நகர் சந்திப்பில், சென்னை துறைமுகத்தில் இருந்து, மணலி நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி டேவிட் மீது மோதியதில், அவர் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்குன்றம் போலீசார், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான பாலமுருகனை, 37, கைது செய்தனர்.
08-Oct-2025