மேலும் செய்திகள்
வீட்டில் கஞ்சா இருவர் கைது
02-Jun-2025
சென்னை:கடந்த ஜன., 25ம் தேதி, கோகைன் போதைப் பொருள் வைத்திருந்த, ராயப்பேட்டையைச் சேர்ந்த பயாஸ் அகமது, 31, உட்பட, 14 பேரை, சூளைமேடு போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, 60 கிராம் கோகைன், 1.70 கிலோ கஞ்சா, 14 மொபைல் போன்கள், மூன்று இருசக்கர வாகனங்கள், மூன்று கார்கள், 2 எடை போடும் இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்திலக், 33, என்பவரை, மே 23ம் தேதியும், வெட்டுவாங்கேணியை சேர்ந்த ராஜ்திலக், 33, என்பவரை ஜூன் 1ம் தேதியும் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய நைஜீரியா நாட்டைச் சேர்ந்த சாரா குமாமா பிளீசிங்ஸ், 41, என்பவரை, பெங்களூரில் வைத்து சூளைமேடு போலீசார், நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
02-Jun-2025