உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை இ.பி., லிங்க் சாலைக்கு தீர்வு வாகனங்கள் பறிமுதல் செய்ய நோட்டீஸ்

சென்னை இ.பி., லிங்க் சாலைக்கு தீர்வு வாகனங்கள் பறிமுதல் செய்ய நோட்டீஸ்

சென்னை, சென்னை அண்ணா சாலை இ.பி., லிங்க் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை, 24 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்தவில்லை எனில் பறிமுதல் செய்யப்படும்' என, மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியுள்ளது. சென்னை அண்ணா சாலையில் மின் வளாகம் உள்ளது. அங்கு, தமிழக மின் வாரிய தலைமை அலுவலகம், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. அவற்றில், 3,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். மின் வளாகத்திற்கு பின்புறம், கால்வாய் இணைப்பு சாலை உள்ளது. இதற்கு, இ.பி., லிங்க் சாலை என்று பெயர்.மின் வாரிய பணியாளர்கள் பயன்படுத்த அமைக்கப்பட்ட இந்த சாலை, தாஜ் கன்னிமாரா ஓட்டல் எதிரில் துவங்கி, அண்ணா சாலை தர்கா வரை செல்கிறது. இ.பி., லிங்க் சாலையின் இருபுறமும், வாடகை கார், வேன், கிரேன் உள்ளிட்ட வாகனங்கள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ளன. அவற்றில், பல வாகனங்கள் பழுதாகி, துருப்பிடித்து மோசமான நிலையில் உள்ளன. இரவில், இந்த வாகனங்களை மறைப்பாக பயன்படுத்தி போதை பொருட்கள் விற்பனை, விபசாரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார் எழுந்துள்ளன. அலுவலகத்திற்கு வாகனங்களில் வர இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்துமாறு மின் வாரிய பணியாளர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளை வலிறுயுத்தினர்.இதையடுத்து, இ.பி., லிங்க் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனே எடுக்குமாறு, அவற்றின் கண்ணாடியில் மாநகராட்சி சார்பில், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டு உள்ளது.நோட்டீசில், 'வாகனங்களை, 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றப்படாத வாகனங்களை, சென்னை மாநகராட்சி அகற்றி பறிமுதல் செய்வதோடு, எக்காரணம் கொண்டும் திருப்பி அளிக்கப்படாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ