மேலும் செய்திகள்
'இலக்கு' வைத்து விற்கப்படும் 'சரக்கு'
09-Sep-2025
சென்னை: ''நாம் முயற்சி செய்தால், அனைவருக்கும் இலவச குடிநீர் வழங்குவது சாத்தியம்தான்,'' என ஒடிசா மாநில அரசின் கூடுதல் தலைமை செயலர் மதிவதனன் பேசினார். 'கட்டுமான தொழில்' இதழ் மற்றும் 'கன்ஸ்ட்ரக் ஷன் அகாடமி' சார்பில், நீர் மேலாண்மை மற்றும் கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கம், சென்னை, நாரதகான சபாவில் நேற்று நடந்தது. அதில், ஒடிசா மாநில அரசின் கூடுதல் தலைமை செயலர் மதிவதனன் பேசியதாவது: கடந்த 2006ல் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு சென்றேன். அங்கு விமான நிலையம் உட்பட அனைத்து இடங்களிலும் வழங்கப்படுவது, சுத்திகரிக்கப்பட்ட துாய நீர்தான் என்பதை அறிந்தேன். அதே முறையை பின்பற்றி, ஒடிசாவில் உள்ள 115 நகரங்களில் 106ல், அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை 24 மணி நேரமும் வழங்கி சாதனை படைத்துள்ளோம். அது ஒன்றும் பிரமாண்ட, செலவு பிடிக்கும் திட்டம் இல்லை. அரசும், மக்களும் மனது வைத்தால், சாத்தியமானதுதான். இவ்வாறு அவர் பேசினார். 'இஸ்ரோ'வின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: செவ்வாய் கிரகத்திற்கு, முதல் முயற்சியிலேயே விண்கலத்தை அனுப்பி சாதித்தது, இந்தியா மட்டும்தான். அதுவும், அங்கு தண்ணீர் உள்ளதை கண்டறிந்ததும் இந்தியாதான். விண்ணில் மட்டுமல்ல. மண்ணிலும் தண்ணீரையும், மண்ணையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு, செயற்கை உரங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். தற்போது, வாழையில் இருந்து எடுக்கப்படும் நீரை உரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளோம். விரைவில், மண் வளம் காக்க புதிய கண்டுபிடிப்புகளை சாத்தியமாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், நீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து, பல்துறை வல்லுனர்கள் பேசினர். ஆடுதுறை பாஸ்கரின், 'கல்லணை கட்டிய கரிகால் சோழன்' வரலாற்று நாட கம் நடந்தது.
09-Sep-2025