லஞ்சம் வாங்கிய அதிகாரி சிக்கினார்
காஞ்சிபுரம், ஏகாஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர், குடிநீர் வியாபாரம் செய்ய, தடையில்லாத சான்று கேட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சியில் விண்ணப்பித்திருந்தார்.அதற்கு சான்று வழங்க சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், 58, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இதையடுத்து சரவணன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அறிவுரைப்படி, 5,000 ரூபாய் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்துள்ளார். நேற்று மாலை, ஆய்வாளர் பிரகாஷ் அதை வாங்கியபோது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.