உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாமரை குளத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு மாற்று இடம் தருவதாக அதிகாரிகள் சமரசம்

தாமரை குளத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு மாற்று இடம் தருவதாக அதிகாரிகள் சமரசம்

எண்ணுார், எண்ணுாரில், வ.உ.சி., நகர், சத்தியவாணி முத்துநகர், காமராஜர் நகர், திருவள்ளுவர் நகர் இடையே, 5.32 ஏக்கர் பரப்பளவிலான தாமரை குளம், ஆக்கிரமிப்புகளால் சிறு குட்டை போல சுருங்கியது. இது தொடர்பாக வழக்கில், குளத்தை சுற்றியுள்ள 53 ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.அதன்படி, கடந்தாண்டில் இரு தவணைகளில், 20 வீடுகள் அகற்றப்பட்டன. அடுத்த கட்டமாக, ஜன., 24 முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.மூன்று நாட்களாக, ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. நான்காம் நாளான நேற்று, வீடுகளை இடிக்க, குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 'கடந்த 60 ஆண்டுகாலமாக வசித்து வரும் எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவது நியாயமுமில்லை. மாநகராட்சியின் தார் சாலை, கட்டடங்கள், தண்ணீர் தொட்டி போன்றவையும் உள்ளன. பட்டா இருக்கும் சூழலிலும், கட்டடங்களை இடிப்பது ஏற்புடையதல்ல' என்றார்.பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தொடர்ந்து, மணலி மண்டல உதவி கமிஷனர் விஜயபாபு, தாசில்தார் சகாயராணி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., - கே.பி.சங்கர் ஆகியோர், சமாதான பேச்சு நடத்தினர். கலெக்டரிடம் பேசி வீடு இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என, எம்.எல்.ஏ., சங்கர் கூறினார். அதைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, 30ம் தேதி வரை தொடரும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankar
ஜன 29, 2025 07:10

அரசுதான் முதல் குற்றவாளி


நிக்கோல்தாம்சன்
ஜன 28, 2025 06:00

60 ஆண்டுகளாக உங்களுக்கு கொடுத்த அரசு அதிகாரிகளிடம் உங்களது இடத்துக்கான பணத்தை வாங்கிக்கோங்க என்று சொல்லிட போறாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை