உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமண புரோக்கர் போல் நடித்து பெண்ணிடம் நகை திருடிய மூதாட்டி

திருமண புரோக்கர் போல் நடித்து பெண்ணிடம் நகை திருடிய மூதாட்டி

கொடுங்கையூர்:கொடுங்கையூர், டீச்சர்ஸ் காலனி பக்தவச்சலம் தெருவைச் சேர்ந்தவர் மோகனா, 54. இவருக்கு லோகேஷ், 30, சதீஷ், 27, என, இரு மகன்கள் உள்ளனர். இருவரும் மலேஷியாவில் பணிபுரிகின்றனர்.மகன்களுக்கு பெண் பார்ப்பதற்காக, மோகனா தெரிந்தவர்களிடமும், புரோக்கர்களிடமும் கூறி வரன் தேடி வந்துள்ளார்.நேற்று முன்தினம் காலை, மோகனாவின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட பெண், திருமண தரகர் எனக்கூறி தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார்.வரன் இருப்பதாகவும், இது குறித்து பேச வீட்டிற்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, மோகனாவிடம் வரன் சம்பந்தமாக பேசி கொண்டிருந்தார். அப்போது, 'உங்கள் வீட்டில் யாரோ செய்வினை வைத்திருக்கின்றனர். அதை சரிசெய்தால் திருமண தடை விலகும்' எனக்கூறி, மோகனாவை நம்ப வைத்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த வேப்பிலை, மஞ்சளை அரைத்து, தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார்.அவரது பேச்சை நம்பிய மோகனா, அதை வாங்கி பருகி உள்ளார். திடீரென மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழிந்து, மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, மோனாவின் கழுத்தில் இருந்த 3 சவரன் செயின் மற்றும் அவரது மொபைல் போன் திருடப்பட்டிருந்தது. வந்து சென்றது திருமண புரோக்கர் இல்லை திருடி என்பது அவருக்கு தெரிய வந்தது.இது குறித்த கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மூதாட்டியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை