உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது/ வாரிய குடியிருப்பு பால்கனி இடிந்து ஒருவர் படுகாயம்

பொது/ வாரிய குடியிருப்பு பால்கனி இடிந்து ஒருவர் படுகாயம்

சென்னை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து, எலக்ட்ரீசியன் படுகாயமடைந்தார்.சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கட்டடம், 60 ஆண்டுகள் பழமையானது என்பதால் சிதிலமடைந்து இடிந்து விழுகிறது. சமீபத்தில், இக்குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து, அதே குடியிருப்பில் வசித்து வந்த சையது குலாம், 23 என்ற எலக்ட்ரீசியன் பலியனார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, 9:50 மணியளவில், குடியிருப்பின், 29 வது பிளாக்கில் வசித்து வரும், எலக்ட்ரீசியன் மோகன்,48, இரண்டாவது மாடியில் உள்ள, பால்கனியில் நின்று கொண்டிருந்தார்.அப்போது, மூன்றாவது மாடியின் பால்கனி இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. இதனால் படுகாயமடைந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ