உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மழையால் அழுகி வீணான வெங்காயம்

 மழையால் அழுகி வீணான வெங்காயம்

கோயம்பேடு: கோயம்பேடு சந்தையில், விற்பனையின்றி தேங்கி அழுகிய வெங்காயம் குப்பையில் கொட்டப்பட்டது. கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, வெங்காயம் வரத்து உள்ளது. இதில், கர்நாடகாவில் இருந்து தினமும் 1,000 டன் வெங்காயம் வரத்து உள்ளது. தற்போது, ஒரு கிலோ கர்நாடகா வெங்காயம், 20 - 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில், தொடர் மழையால் நனைந்த காரணத்தால், மூன்று நாட்களுக்கு மேல் தாங்காமல் அழுகி வருகிறது. அந்த வகையில், 500 கிலோ வெங்காயம், நேற்று குப்பையில் கொட்டப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை