மேலும் செய்திகள்
40 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
13-Nov-2024
64 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
09-Nov-2024
கடத்தல் பெண்ணை காட்டிக்கொடுத்த சிசிடிவி
15-Nov-2024
சென்னை,மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையங்கள் மாவட்டங்கள் தோறும் உள்ளன. அடையாள அட்டை, உபகரணங்கள், பயிற்சிகளுக்கு நீண்ட துாரம் பயணிக்க வேண்டி உள்ளது.இதனால், தாலுகா அளவில், ஒற்றைச்சாளர சமூகநல சேவை மையம் அமைக்க, மாற்றுத்திறனாளிகள் துறை முடிவு செய்தது. இதற்கான நிதிஉதவியை, உலக வழங்கி வழங்குகிறது. தமிழகத்தில் முதல் மையம், கண்ணகி நகரில் துவங்கப்பட உள்ளது. ஏற்கனவே, 12,900 சதுர அடி இடத்தில், 3,600 சதுர அடி பரப்பில், 2008ல் கட்டப்பட்ட திருமண மண்டபம் மூடப்பட்டு, அங்கு, 2011ல் கண்ணகி நகர் காவல் நிலையம் துவங்கப்பட்டது.காவல் நிலையம் சொந்த கட்டடத்திற்கு மாறிய பின், 2023ம் ஆண்டு, போதை மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டது.இந்நிலையில், இந்த கட்டடத்தில், இரண்டு கோடி ரூபாய் செலவில், ஒற்றை சாளர மையம் துவங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.வரும், 25ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களுக்கான திட்டங்கள் எளிதில் கிடைக்கும் வகையில், இத்திட்டம் துவங்கப்படுகிறது. மருத்துவ சான்றிதழ், அடையாள அட்டை, சலுகை அட்டைகள், உபகரணங்கள், தொழில் வழிகாட்டி ஆலோசனைகள், வங்கி கடன்கள் பெற்று கொடுப்பது போன்றவை, இந்த இடத்தில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை இருக்கும். கலெக்டர், அமைச்சர், கமிஷனர் அலுவலகம் போன்ற துறைகளுக்கு செல்ல வேண்டியதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
13-Nov-2024
09-Nov-2024
15-Nov-2024