உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தற்காப்பு பயிற்சி அகாடமிக்கு வாய்ப்பு

 தற்காப்பு பயிற்சி அகாடமிக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கட்டுப்பாட்டின் கீழ், ஆறு விடுதிகள், மாணவியருக்காக செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள மாணவியருக்கு, கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்க, பெண் பயிற்சியாளர்கள் உள்ள அகாடமிகள் விண்ணப்பிக்கலாம். இந்த அகாடமியானது, மாணவ - மாணவியருக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பயிற்சி வழங்கிய அனுபவம் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, ஆட்சியர் அலுவலகம், 2வது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில், படிவமாக அல்லது gmail.comஎன்ற மின்னஞ்சல் வாயிலாக, நாளை மாலைக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்