உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சீர்திருத்த பள்ளியில் சிறுவனை 6 மாதம் தங்க வைக்க உத்தரவு

சீர்திருத்த பள்ளியில் சிறுவனை 6 மாதம் தங்க வைக்க உத்தரவு

சென்னை : திருட்டு வழக்கில் சிக்கிய சிறுவனை, ஆறு மாதம் சீர்திருத்தப்பள்ளியில் தங்க வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி, பெரிய தெருவில் வசிக்கும் சரிதா என்பவரது வீட்டில், ஜூன் 23ல், 20,000 ரூபாய் மற்றும் மூன்று மொபைல் போன்கள் திருடுபோயின. திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுவனை பிடித்து, கீழ்ப்பாக்கம் கெல்லீசில் உள்ள, சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். தொடர் விசாரணையில், இவர் மீது ராயப்பேட்டை மற்றும் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட சிறுவன் மீது இளஞ்சிறார் நீதிக்குழும நடுவர் முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. உரிய விசாரணைக்கு பின், அச்சிறுவனை தொடர்ந்து ஆறு மாதம் சீர் திருத்தப்பள்ளியில் தங்க வைக்க இளஞ்சிறார் நீதிக்குழும நடுவர் உத்தரவிட்டுள்ளார். மிரட்டல் வழக்கு கடந்த 2020ல், கொருக்குப்பேட்டை காவல் நிலைய எல்லையில் சென்ற நபர் ஒருவரை தடுத்து நிறுத்தி, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சாந்தகுமார், 57, என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தொடர்பான வழக்கு, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வளாகத்தில், 15 வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நீதிமன்றம் உரிய விசாரணைக்கு பின், சாந்தகுமாருக்கு, 3,500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை