உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் நிறுவனத்தின் கார் பழுது ரூ.42.27 லட்சம் வழங்க உத்தரவு

தனியார் நிறுவனத்தின் கார் பழுது ரூ.42.27 லட்சம் வழங்க உத்தரவு

சென்னை:சென்னை தி.நகர் 'போத்தீஸ்' நிறுவனம், 2016 ஜன., 27ல், தன் மேலாண் இயக்குனர் பயன்பாட்டுக்கு, 'ஜாகுவார் எக்ஸ்.எப்., 3.0 எல்' டீசல் பிரீமியம் செடான் சொகுசு காரை, எத்திராஜ் சாலை ஷோரூமில், 61.59 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.கார், 22,402 கி.மீ., துாரம் ஓடிய நிலையில், 2018 மார்ச் 3ல், இன்ஜின் பழுதாகி சாலையில் நின்றது.இதையடுத்து பெங்களூருவில் உள்ள பழுது பார்ப்பு மையத்தில் இன்ஜின் மாற்றப்பட்டது. இதற்கு 10.95 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.கடந்த 2019 செப்., 18ல் மீண்டும் இன்ஜின் பழுதாகி சாலையில் நின்றது. பின், பூந்தமல்லியில் உள்ள பழுது பார்ப்பு மையத்துக்கு அனுப்பப்பட்ட கார், ஓராண்டுக்கு மேலாகியும் சரிசெய்து தரப்படவில்லை.தரம் குறைந்த சொகுசு காரை விற்று மன உளைச்சல் ஏற்படுத்திய அண்ணா சாலை கார் ஷோரூம், மும்பை மற்றும் இங்கிலாந்தில் உள்ள கார் நிறுவன அதிகாரிகளுக்கு எதிராக, வழக்கு தொடரப்பட்டது.'போத்தீஸ்' நிறுவனம் தரப்பில் முத்துகுமார் என்பவர், சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் கமிஷனில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த கமிஷன் தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர் சிவகுமார், ''மனுதாரருக்கு 42.27 ஆயிரம் ரூபாய் அல்லது காரில் புதிய இன்ஜின் பொருத்தி இயங்கும் நிலையில், அண்ணா சாலை கார் ஷோரூம், மும்பையில் உள்ள கார் நிறுவனம் இணைந்து வழங்க வேண்டும்.''சேவை குறைபாடுக்கு 50,000 ரூபாயும், வழக்கு செலவுக்கு 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்,'' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை