உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெயின்டர் துாக்கிட்டு தற்கொலை

பெயின்டர் துாக்கிட்டு தற்கொலை

ஆவடி: ஆவடி, சரஸ்வதி நகர், சூரியகாந்தி தெருவைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன், 40; பெயின்டர். இவரது மனைவி கீர்த்திகா, 32. தம்பதிக்கு மூன்று மாத பெண் குழந்தை உள்ளது.கடந்த 1ம் தேதி, மஞ்சுநாதன், திருப்பத்துார் சென்று மனைவி, குழந்தையை பார்த்துவிட்டு சென்னை திரும்பினார். ஆனால், இரு தினங்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆவடி போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, மஞ்சுநாதன் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை